பூகம்பமாய் வெடித்துள்ள “Pandora Papers” விவகாரம்! உடனடி விசாரணைக்கு அழைப்பு
பண்டோரா ஆவணத்தில் (Pandora Papers) வௌிக்கொணரப்பட்ட தகவல்கள் தொடர்பாக இலங்கை சுயாதீன விசாரணையை உடனடியாக நடத்த வேண்டும் என Transparency International Sri Lanka நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
பண்டோரா வௌிப்படுத்திய நிதி கொடுக்கல் வாங்கல்கள் இலங்கையின் பொது உடைமைகள் தவறாக பயன்படுத்தப்பட்டதன் மூலம் ஈட்டப்பட்ட பணமா என்பது தொடர்பில் விரிவான உள்ளக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அந்த நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
உலகிலுள்ள முக்கிய அரசத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் செல்வந்தர்களின் நிதித் தொடர்பான இரகசிய தகவல், இரகசிய ஆவணங்கள் “பென்டோரா பேப்பர்ஸ்” என்ற பெயரி கசிந்து உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதுள்ள மற்றும் முன்னாள் அரச தலைவர்கள் 35 பேரின் பெயர்களும், 300ற்கும் அதிகமான முக்கிய நபர்களின் பெயர்களும் இவற்றில் அடங்குவதாக அறிய முடிகின்றது.
இதில் இலங்கையின் முன்னாள் பிரதி அமைச்சராக பதவி வகித்த அரச குடும்பத்தைச் சேர்ந்த நிருபமா ராஜபக்ஸவின் பெயரும் இந்த பென்டோரா பேப்பர்ஸ் ஆவணத்தில் வெளியாகியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.