யாழ். தீவுகளுக்கான படகுச் சேவை: வடக்கு ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை

Jaffna Northern Province of Sri Lanka P. S. M. Charles
By Laksi Jun 07, 2024 03:26 PM GMT
Report

யாழ். தீவுகளுக்கான பயணிகள் போக்குவரத்திற்குரிய படகுச் சேவை விஸ்தரிக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ( (P.S.M.Charles) தெரிவித்துள்ளார்.

பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு போக்குவரத்துத்துறை மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் வடக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண  ஆளுநரின்  தலைமையில் இன்று (07) செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

யாழில் உணவகத்திற்கு எதிராக நடவடிக்கை: காலாவதியான உணவு விற்பனை

யாழில் உணவகத்திற்கு எதிராக நடவடிக்கை: காலாவதியான உணவு விற்பனை

போக்குவரத்துத் துறையில் காணப்படும் சிக்கல்கள்

இதன்போது, வடக்கு மாகாணத்தில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய வீதிகள், புனரமைக்கப்பட வேண்டிய வீதிகள் , எதிர்கால திட்ட முன்மொழிவுகள், தொடருந்து போக்குவரத்து, கடல்வழி போக்குவரத்துச் செயற்பாடுகள், வடக்கு மாகாண போக்குவரத்துத் துறையில் காணப்படும் சிக்கல்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

யாழ். தீவுகளுக்கான படகுச் சேவை: வடக்கு ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை | Transport Sector Aimed At Economic Development Np

தீவுகளுக்கான பயணிகள் போக்குவரத்திற்குரிய படகுச் சேவை விஸ்தரிக்கப்பட வேண்டும் எனவும், இறங்குத் துறைகள் புனரமைக்கப்பட வேண்டும் எனவும்  ஆளுநர்  கூறினார்.

பேருந்து பயணிகள் நாளாந்தம் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பிலும் இந்த கூட்டத்தின் போது வடக்கு ஆளுநர் எடுத்துரைத்தார்.

யாழ். மாவட்ட ரீதியாக சாதனை படைத்த மாணவி: ஊர் திரண்டு விழா எடுத்த பொதுமக்கள்

யாழ். மாவட்ட ரீதியாக சாதனை படைத்த மாணவி: ஊர் திரண்டு விழா எடுத்த பொதுமக்கள்

பாதுகாப்பற்ற தொடருந்து கடவை

ஒருங்கிணைந்த நேர அட்டவணையில் அரச மற்றும் தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அதற்கான உரிய செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு மத்திய அமைச்சின் துறைசார் அதிகாரியால், மாகாண அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

யாழ். தீவுகளுக்கான படகுச் சேவை: வடக்கு ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை | Transport Sector Aimed At Economic Development Np

பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகளுக்கான சமிஞ்சைக் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், யாழ் மற்றும் காங்கேசன்துறை தொடருந்து  நிலையங்களுக்கு அருகில் போக்குவரத்து முனையங்களை நிறுவுதல் போன்ற விடயங்கள் குறித்தும் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆலோசனைகளை முன்வைத்தார்.

வடக்கு மாகாணத்திலுள்ள தொடருந்து நிலையங்களுக்கு அருகில் காணப்படும் பொருள் களஞ்சியசாலைகளை உரியவாறு பயன்படுத்த வேண்டும் எனவும், பயன்பாடு குறைந்து காணப்படும் களஞ்சியசாலைகளை தனியாரிடம் வழங்கி அவற்றை மேம்படுத்த வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள்: மோடியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள்: மோடியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

பொருளாதார அபிவிருத்தி

போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதனூடாக பொருளாதார அபிவிருத்திகளை அடைய முடியும் எனவும், சுற்றுலாத்துறைசார் விடயங்களை மையப்படுத்தி போக்குவரத்து சேவை விஸ்தரிக்கப்பட வேண்டும் எனவும் வடக்கு ஆளுநர் கூறினார்.

யாழ். தீவுகளுக்கான படகுச் சேவை: வடக்கு ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை | Transport Sector Aimed At Economic Development Np

வடக்கு மாகாணத்தில் போக்குவரத்துத் துறையை விஸ்தரிப்பது தொடர்பில் கேட்டறிந்துக்கொண்ட மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர், கடழ்வழி போக்குவரத்தின் அவசியம் மற்றும் தேவை தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

அத்துடன் எதிர்வரும் ஒன்றரை மாதங்களுக்குள் தண்டவாள புனரமைப்பு நிறைவு செய்யப்பட்டு, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான நேரடி தொடருந்து சேவை மீள ஆரம்பிக்கப்படும் எனவும் போக்குவரத்துத் துறையை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், வட மாகாணத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண்: காவல்துறையினர் தீவிர விசாரணை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண்: காவல்துறையினர் தீவிர விசாரணை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026