பயணக் கட்டுப்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு
sri lanka
people
asela gunawarthana
By Shalini
கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் அதிகமாக இனங்காணப்படுவார்களானால் மாகாணங்களுக்கிடையில் பயணத் தடை விதிக்க நேரும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மக்கள் மிக அவதானமாக செயற்படாவிட்டால் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவும் எச்சரிக்கை சூழ்நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர்கள் பிரிவு தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்றுவரை நாடளாவிய ரீதியில் 14 மாவட்டங்களில் 06 பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 98 கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்