மிருசுவில் படுகொலை: முன்னாள் இராணுவ அதிகாரிக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு
மிருசுவில் படுகொலை தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவுக்கு எதிராக இலங்கை உயர் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடை விதித்துள்ளது.
2020 மார்ச் மாதம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய குறித்த இராணுவ அதிகாரிக்கு பொதுமன்னிப்பு வழங்கிய முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை
இதன்படி, வழக்கில் உள்ள அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை தாக்கல் செய்ய நீதிமன்றம், 08 வார கால அவகாசம் அளித்துள்ளதுடன், வழக்கின் இறுதித் தீர்ப்பை அதன் பின்னர் வழங்குவதாக ஒத்திவைத்துள்ளது.
2000 டிசம்பரில் யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில், 8 பொதுமக்கள் கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்க குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 2015 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
எதிர்ப்பு
எனினும், 2020 ஆம் ஆண்டில், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுனில் ரத்நாயக்கவை மன்னித்து விடுவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து, குறித்த விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மிருசுவில் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும், எதிர்த்து மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமும் மனுக்களை தாக்கல் செய்திருந்தன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்