போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்! ஜி.எல் பீரிஸ் வெளியிட்டுள்ள தகவல்
srilanka
covid19
corona
g l peiris
peoples
By S P Thas
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட அல்லது மாகாண மட்டத்தில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜிஎல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கோரிக்கை விடுக்கப்பட்டால் மாவட்ட அல்லது மாகாண மட்டத்தில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படும்.
கொரோனா பரவல் நிலை நாள்தோறும் மாற்றமடைந்து வருகிறது. எனவே அதனைக்கட்டுப்படுத்த அரசாங்கம் தேவையான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் நாள்தோறும் மாறிவரும் நிலைமைகளை கருத்திற்கொண்டு செயற்பாடுகளை மேற்கொள்ள அரசாங்கம் எப்போதும் தயாராகவே உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்