உடன் அமுலுக்கு வரும் வகையில் மற்றுமொரு பகுதிக்கும் பயணக்கட்டுப்பாடு
srilanka
travel restriction
delta virus
By Jaso
உடன் அமுலுக்கு வரும் வகையில் மற்றுமொரு பகுதிக்கும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இ
தன்படி மாதிவெல, பிரகதிபுர பகுதியில் ஒருவருக்கு டெல்டா வகை வைரஸ் தொற்று உள்ளமை தொடர்பாக ஏற்பட்டுள்ள சந்தேகத்தை அடுத்தே அப்பகுதியில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அப்பகுதிக்கு எவரும் உள்நுழையவோ அல்லது அப்பகுதியில் இருந்து வௌியேறவோ முடியாது என தெரிவிக்கப்படுகின்றது.
டெல்டா வகை வைரஸ் தொற்றாளர் என சந்தேகக்கும் தொற்றாளர் ஒருவர் ஏற்கனவே அப்பகுதியில் இனங்காணப்பட்டிருந்தார். இந்த நிலையில் குறித்த தொற்றாளருடன் தொடர்பில் இருந்த பெண் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்தே அப்பகுதிக்கு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி