புதையல் தோண்டியவர்கள் கைது
#srilainka
#treasure-hunters
#arrested
By Independent Writer
ஹங்குரன்கெத்த காவல்துறை பிரிவுக்குட்பட்ட இல்லகொல்ல பகுதியில் பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து புதையல் தோண்டிய குற்றச்சாட்டின்பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இல்லகொல்ல பகுதியில் பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து நேற்று(24) கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் ஒருவர் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் எனவும் ஏனையோர் ஹங்குரன்கெத்த பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர் .
புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
சந்தேகநபர்கள் வலப்பனை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.