நீதிமன்ற விசாரணைக்கு சமூகமளிக்காத கெஹலிய: வெளியான காரணம்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பான வழக்கின் விசாரணைக்கு அவர் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்கவில்லை.
இந்நிலையில், கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு சிறைச்சாலை மருத்துவமனை வழங்கிய மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த காரணத்தினாலேயே அவர் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
விளக்கமறியல் உத்தரவு
அத்துடன், வழக்குடன் தொடர்புடைய ஏனைய ஏழு சந்தேக நபர்களும் இன்று(15) நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.
தரம் குறைந்த மருந்துகளை இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கடந்த 2 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
அதன்பின்னர், மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் கடந்த 03 ஆம் திகதி அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்..! |