பாக்கு நீரிணையை நீந்திக்கடந்த மட்டக்களப்பு மாணவர்களுக்கு கௌரவிப்பு(படங்கள்)

Batticaloa Sivanesathurai Santhirakanthan India
By Shadhu Shanker Oct 26, 2023 07:54 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்குமிடையிலான 30 கிலோமீட்டர் கடலை நீந்திக் கடந்து சாதனை நிலைநாட்டியுள்ள மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் மூன்று மாணவர்களுக்குமான வரவேற்பு மற்றும் கௌரவிப்பு நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது கடந்த திங்கட்கிழமை (23) மட்டக்களப்பு (சிங்கிங் பிஸ்) சுற்றுலா விடுதியில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு கே.கே.சண்முகம் அறக்கட்டளையின் அனுசரணையில் அதன் ஸ்தாபகர் ச.சண்முகேசனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் வரவேற்பு கௌரவிப்பு நிகழ்வில், சாதனை புரிந்த மாணவர்களுக்கு அரசியல்வாதிகளும், வர்த்தக பிரமுகர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகளும் நீச்சல் சாதனை புரிந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கும் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

பாக்கு நீரிணையை நீந்திக்கடந்த மட்டக்களப்பு மாணவர்களுக்கு கௌரவிப்பு(படங்கள்) | Tribute The Scouts Swam Across The Straits Of Baku

வீதி விபத்துக்களில் 115 சிறுவர்கள் பலி : சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் தகவல்

வீதி விபத்துக்களில் 115 சிறுவர்கள் பலி : சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் தகவல்

சாதனைப் பயணம்

இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா), மட்.புனித மிக்கேல் கல்லூரியின் அதிபர் அன்ரன் பெனடிக் யோசப், முன்னாள் அதிபர் பயஸ் ஆனந்தராஜா, மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் விவேகானந்த பிரதீபன், மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் எம்.செல்வராசா, மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் எஸ்.ரஞ்சிதமூர்த்தி, மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் உப தலைவர் கலீல்; ஹாஜியார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர், சாரண சங்கத்தினர், லயன்ஸ் கழகம், ரோட்டறி கழகம், லியோ கழகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் பங்கு கொண்டிருந்தனர்.

நிகழ்வின் வரவேற்புரையினை மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் விவேகானந்த பிரதீபன் நிகழ்த்தினார்.

பாக்கு நீரிணையை நீந்திக்கடந்த மட்டக்களப்பு மாணவர்களுக்கு கௌரவிப்பு(படங்கள்) | Tribute The Scouts Swam Across The Straits Of Baku

அதிகாரிகள் மீது சீறிப் பாய்ந்த வடக்கு ஆளுநர் (படங்கள்)

அதிகாரிகள் மீது சீறிப் பாய்ந்த வடக்கு ஆளுநர் (படங்கள்)

 ஆசியச் சாதனை

தலைமையுரையினை புனித மிக்கேல் கல்லூரியின் அதிபர் அன்ரன் பெனடிக் யோசப் அவர்களும், தமது பிள்ளைகளின் சாதனைப் பயணம் குறித்த கருத்து, நன்றியுரையினையும் சாதனை புரிந்த மாணவர்களின் தந்தையான புளோரிங்டன் வழங்கினார்.

மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசியப் பாடசாலையின் சிரேஷ்ட சாரண மாணவர்களான புளோரிங்டன் டயன்ஸ்ரித், புளோரிங்டன் டயன் பிறிடோ மற்றும் இருதயநாதன் கெல்வின் கிசோ ஆகிய மூவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) அதிகாலை ஒரு மணியளவில் ஆரம்பித்த தமது சாதனைப் பயணத்தினை முற்பகல் 10.30 மணியளவில் நிறைவு செய்திருந்தனர்.

கடலில் பிளாஸ்ரிக் பொருட்கள் கலப்பதனை தடுக்கும் நோக்கிலான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நீச்சல் முயற்சியானது பாக்கு நீரிணையைக் கடந்து மேற்கொள்ளப்பட்டுள்ள ஆசியச் சாதனையை முறியடிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டது.

பாக்கு நீரிணையை நீந்திக்கடந்த மட்டக்களப்பு மாணவர்களுக்கு கௌரவிப்பு(படங்கள்) | Tribute The Scouts Swam Across The Straits Of Baku

 சர்வதேச ரீதியில்

அத்துடன், புனித மிக்கேல் கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடைபெற்று வருகின்ற நிகழ்வுகளின் ஒரு அங்கமாகவும் இது அமைந்திருந்தது.

இவ் நீச்சல் முயற்சியானது, இளம் மாணவர்கள் பாக்கு நீரிணையை நீந்திக்கடந்தமை, மூவர் இணைந்து அத்துடன் மூன்று சாரண மாணவர்கள் நீச்சலில் ஈடுபட்டமை, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் ஈடுபட்டமை உள்ளிட்ட சாதனைகளைத் தட்டிக்கொண்டுள்ளதுடன், ஆசியச் சாதனையின் இரண்டாவது இடத்தினையும் இந்த நீச்சல் முயற்சி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவரும் அதிபர் விருது பெற்ற சிரேஷ்ட சாரணருமான தவேந்திரன் மதுஷிகன் சில மாதங்களுக்கு முன்னர் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து ஏற்கனவே சாதனை படைத்துள்ள நிலையில் இம் மூன்று மாணவர்களும் இணைந்து மீண்டுமொருமுறை சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.

இம் மூன்று மாணவர்களுள், இருவர் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தம் தமிழ் மாணவர்களது சாதனையைப் பாராட்டும் வகையில் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பாராட்டுக்கள் குவிந்தவண்ணமுள்ளன. 

திருகோணமலையை பௌத்த மாவட்டமாக மாற்ற துரித நடவடிக்கை : அரச அதிகாரிகளும் துணையாம்

திருகோணமலையை பௌத்த மாவட்டமாக மாற்ற துரித நடவடிக்கை : அரச அதிகாரிகளும் துணையாம்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016