அரசியல் ஆய்வாளர் சி.அ. ஜோதிலிங்கங்கத்திற்கு P2P கண்ணீர் அஞ்சலி

Tamils Jaffna Death
By Independent Writer Oct 11, 2026 02:52 PM GMT
Report

தமிழ்த் தேசிய அரசியல் சிந்தனைப் பரப்பில் ஆழமான தடம் பதித்தவரும், மூத்த சட்டத்தரணியும், அரசியல் ஆய்வாளரும், எழுத்தாளரும், கல்வியாளருமான சி.அ. ஜோதிலிங்கம் அவர்கள் 09.10.2026 அன்று தனது 70ஆவது வயதில் எம்மைவிட்டுப் பிரிந்த செய்தி ஆழ்ந்த துயரத்தையும் பேரிழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்த் தேசிய அரசியல் சிந்தனைக்கும், மக்களின் அரசியல் விழிப்புணர்வுக்கும் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த ஒரு சிந்தனையாளரை நாம் இழந்திருக்கிறோம் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின்(P2P) சார்பில் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த அஞ்சலி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இளமைப் பருவத்திலேயே தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் குறித்த அக்கறை

  யாழ்ப்பாணம் குப்பிழான் மண்ணில் பிறந்த ஜோதிலிங்கம் , தனது இளமைப் பருவத்திலேயே தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் குறித்த அக்கறையுடன் பொதுவாழ்வில் ஈடுபடத் தொடங்கினார். 1970ஆம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தல் முறைக்கு எதிராக உருவான தமிழ் மாணவர் பேரவையின் ஆரம்பகால உறுப்பினராகப் பங்கெடுத்ததன் மூலம் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். அன்றிலிருந்து வாழ்வின் இறுதிவரை தமிழர் அரசியல் உரிமைகள் மற்றும் தேசிய விடுதலை சார்ந்த சிந்தனைகளில் உறுதியுடன் பயணித்தார்.

அரசியல் ஆய்வாளர் சி.அ. ஜோதிலிங்கங்கத்திற்கு P2P கண்ணீர் அஞ்சலி | Tribute To Political Analyst Ca Jothilingam

அரசியல் ஆய்வாளர் என்ற வகையில், ஈழத்தமிழர் அரசியல், தமிழ்த் தேசியம், சர்வதேச அரசியல் மற்றும் புவிசார் அரசியல் போன்ற சிக்கலான விடயங்களை ஆழமாக ஆராய்ந்து, அவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தனித்துவமான பங்களிப்பைச் செய்தார். பல தசாப்தங்களாக அவர் எழுதிய நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளும் வெளியிட்ட நூல்களும் தமிழ்ச் சிந்தனைப் பரப்பின் முக்கியமான அறிவுசார் பங்களிப்புகளாகத் திகழ்கின்றன.

 அரசியல் நிகழ்வுகளை வெறுமனே பதிவு செய்வதோடு நின்றுவிடாமல், அவற்றின் பின்னணியையும் எதிர்கால விளைவுகளையும் ஆராய்ந்து மக்களிடையே அரசியல் தெளிவையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவது அவரது பணியின் தனிச்சிறப்பாக இருந்தது.

மலையக மக்களின் உரிமைகள்

மேலும், மலையக மக்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் அரசியல், சமூக வாழ்வுடன் தொடர்புடைய கொள்கை விவாதங்களிலும் அக்கறையுடன் பங்களித்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் தொடர்பான விவாதங்களில் அறிவுசார் தளத்திலிருந்து குரல் கொடுத்த அவரது பங்களிப்பும் நினைவுகூரத்தக்கது.

அரசியல் ஆய்வாளர் சி.அ. ஜோதிலிங்கங்கத்திற்கு P2P கண்ணீர் அஞ்சலி | Tribute To Political Analyst Ca Jothilingam

 ஒரு மனிதர் மறையலாம்; ஆனால் அவர் உருவாக்கிய சிந்தனைகளும், எழுப்பிய கேள்விகளும், சமூகத்தில் ஏற்படுத்திய அறிவுத் தாக்கமும் மறைந்துவிடுவதில்லை.

ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்

ஜோதிலிங்கம் ஐயா அவர்களின் மறைவு அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் மட்டுமல்ல; தமிழ்த் தேசிய அரசியல் ஆய்வுலகிற்கும், கல்வியியல் துறைக்கும், சமூகச் செயற்பாட்டுத் தளத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவு விட்டுச்செல்லும் அறிவுசார் வெற்றிடத்தை நிரப்புவது எளிதானதல்ல.

அரசியல் ஆய்வாளர் சி.அ. ஜோதிலிங்கங்கத்திற்கு P2P கண்ணீர் அஞ்சலி | Tribute To Political Analyst Ca Jothilingam

 பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கமானது, ஜோதிலிங்கம் ஐயா அவர்களின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடனும் தனது துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறது. அவர்களுக்கான எமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அவரது நீண்டகால அரசியல் ஆய்வுப் பங்களிப்புகளையும், அறிவுசார் உழைப்பையும், தமிழ்ச் சமூகத்தின் அரசியல் விழிப்புணர்வுக்காக அவர் ஆற்றிய பணிகளையும் மரியாதையுடன் நினைவுகூர்கிறோம்.

ஜோதிலிங்கம் ஐயா அவர்களே! உங்களது மறைவு எம்மிடமிருந்து ஓர் ஆளுமையைப் பிரித்திருக்கலாம். ஆனால் தமிழர் அரசியல் சிந்தனைப் பரப்பில் நீங்கள் பதித்த தடங்களையும், உங்கள் எழுத்துகள் வழியாக விதைத்த சிந்தனைகளையும் காலத்தால் அழித்துவிட முடியாது.

உங்கள் நினைவுகளும் பங்களிப்புகளும் எதிர்காலத் தலைமுறைகளுக்கு ஓர் அறிவுசார் மரபாகத் தொடர்ந்து செல்லட்டும்.

சி.அ. ஜோதிலிங்கம் அவர்களுக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் சார்பில் எமது இதயபூர்வமான புகழ் வணக்கத்தையும் கண்ணீர் அஞ்சலியையும் செலுத்துகிறோம்.

ஜோதிலிங்கம் ஐயா அவர்களின் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கட்டும்! 

அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் திடீர் மறைவு - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இரங்கல்

அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் திடீர் மறைவு - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இரங்கல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026