யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி...! அநுர அரசின் மற்றொரு அறவிப்பு
யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவது மக்களின் ஜனநாயக உரிமை என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் (Kilinochchi) நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் வர முன்பே மக்கள் இறந்தவர்களை நினைவு கூர்ந்தனர்.
நினைவு கூருவதற்கு உரிமை
அது அவர்களின் ஜனநாயக உரிமையாகவே காணப்பட்டது. எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றது.

இறந்த தங்களுடைய உறவினர்களை சுதந்திரமாக நினைவுகூர முடியும். பாதுகாப்பு படையினரும் அதற்கு தடையாக இருக்க மாட்டார்கள் என்றார்.
இதேவேளை உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு உரிய உரிமை மக்களுக்கு உள்ளது. எனினும் அந்த உரிமை என்பது விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கானது அல்ல என அமைச்சர் முன்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |