வவுனியாவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற முள்ள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி!
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகள் மற்றும் 2006ம் ஆண்டு ஏ9 வீதி தாண்டிக்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட விவசாயக் கல்லூரி மாணவர்கள் ஆகியோரிற்கு வவுனியாவில் உணர்வுப்பூர்வமான முறையில் அஞ்சலி நிகழ்வு ஒன்று நேற்று(13) இடம்பெற்றுள்ளது.
வவுனியா, திருநாவற்குளம் 03ம் ஒழுங்கையில் இடம்பெற்ற இந்நிகழ்வினை போராளிகள் நலன்புரி சங்கம் மற்றும் தமிழ் தேசிய ஏற்பாட்டாளர்கள் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் போரில் மடிந்த உறவுகளுக்காகவும், படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்காகவும் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன், மலர் அஞ்சலியும் இடம்பெற்றிருந்தது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி
இதன்போது போர்க்காலத்தின் வலிகளையும் பட்டினியையும் நினைவூட்டும் குறியீடாக அமைந்த 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், பொதுமக்களிற்கும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மததலைவர்கள், தமிழ் அரசியல் கட்சியிகளின் உறுப்பினர்கள், பொது அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |