திருகோணமலை - பரகும்புர பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு
trinco
police
death
investication
By Vanan
திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிப்பொத்தானை பரகும்புர பகுதியில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று(03) இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் அவரது வீட்டுக்கு முன்னால் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரியவருகிறது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சரத் உதயகுமார் வயது(29) என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்