பாசம் காட்டாத அம்மம்மா: தீர்த்து கட்டிய 15 வயதான பேத்தி : அதிர வைக்கும் திருமலை இரட்டை படுகொலை
அம்மம்மா தன்னைத் திட்டுவதாகவும், தன்னில் பாசம் காட்டுவதில்லை எனவும் மன அழுத்தம் காரணமாக இருவரையும் கொலை செய்ததாகவும் காவல்துறையினரிடம் 15 வயதான சிறுமி ஒப்புக் கொண்டுள்ளார்.
திருகோணமலை மூதூர் – தாஹா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நேற்றுமுன்தினம் (14) அதிகாலை சகோதரிகளான பெண்கள் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.
இரண்டு பெண்கள் படுகொலை
இந்த சம்பவம் தொடர்பில் 15 வயதான சிறுமி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்திய நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் 68 வயதான சிறிதரன் ராஜேஸ்வரி, 74 வயதான சக்திவேல் ராஜகுமாரி ஆகிய இரு பெண்களே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொலை செய்ததை ஒப்புக்கொண்ட சிறுமி
அதிகாலை வேளை குறித்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் படுகொலைச் சம்பவத்தின்போது கூரிய ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதில் இருவருடைய கழுத்துப் பகுதிகளில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு இருவரும் உயிரிழந்த நிலையில் 15 வயதான மகள் சிறு காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதன்போது கொலைச் சம்பவம் தொடர்பில் சிறுமியிடம் காவல்துறையினர் மேற்கொண்ட நீண்ட நேர விசாரணையின் பின்னர் சிறுமி தானே கொலையைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
மூதூர் காவல்துறையினர் மேலதிக விசாரணை
இதன் பின்னர் சிறுமி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மூதூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்