மீன் ஏற்றி வந்த பாரவூர்தி குடைசாய்ந்து விபத்து: இருவர் மருத்துவமனையில் அனுமதி
Sri Lanka Police
Trincomalee
Eastern Province
Accident
By Shadhu Shanker
திருகோணமலை மாவட்டத்தில் மீன் ஏற்றி வந்த பாரவூர்தி குடைசாய்ந்ததில் இருவர் படுகாயங்களுடன் கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கந்தளாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட 87 ஆம் கட்டை பகுதியில் இன்று (30) காலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நிலாவெளி பிரதேசத்திலிருந்து கந்தளாயிற்கு மீன் ஏற்றி வந்த போது 87 ஆம் கட்டைப் பகுதி வளைவில் வேக கட்டுப்பாட்டை இழந்து பாரவூர்தி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறை தெரிவிக்கின்றது.
மேலதிக விசாரணை

இவ்விபத்தில் வாகன சாரதியும் உதவியாளரும் படுகாயங்களுடன் கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை கந்தளாய் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.