ஊடகவியலாளர் நிமலராஜனின் விசாரணை அறிக்கை: திருகோணமலையில் வெளியீடு
திருகோணமலையில் (Trincomalee) படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
குறித்த அறிக்கை வெளியீடு நாளை (12) மாலை 4.30 மணிக்கு திருகோணமலை கடற்கரையில் வெளியிடப்படவுள்ளது.
இந்த அறிக்கை வெளியீட்டு நிகழ்வை திருகோணமலையின், வடக்கு கிழக்கு சமூக இயக்கம் முன்னெடுத்துள்ளது.
விசாரணை அறிக்கை
அத்தோடு, ஊடகவியலாளர் நிமலராஜன் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை மன்னாரில் (Mannar) இன்று (11) விநியோகிக்கப்பட்டது.
குறித்த நடவடிக்கை மன்னார் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் மன்னார் ஊடகவியலாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்
மன்னாரில் காற்றாலைக்கு எதிராக 40 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மக்கள் போராட்டத்தில் வைத்து முதல் கட்டமாக குறித்த அறிக்கை வினியோகிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, பொதுமக்கள், வர்த்தகர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் என பலருக்கும் குறித்த விநியோகிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை அறிக்கை மற்றும் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் தொடர்பான தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





