இந்தியாவுக்கு காணிகளை தாரை வார்க்காதே! முத்து நகரில் மக்கள் போராட்டம்

Trincomalee SLFP Sirimavo Bandaranaike Eastern Province
By Aadhithya Aug 16, 2024 12:31 PM GMT
Report

திருகோணமலை (Trincomalee) மாவட்டம் பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதி மக்களால் இந்தியாவிற்கு (India) காணிகளை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது, இன்று (16) இடம்பெற்றுள்ளது.

அந்த வகையில், வெளிநாட்டு அல்லது உள்நாட்டு நிறுவனங்களுக்கு மக்கள் காணிகளை துறைமுக அதிகார சபையினர் குத்தகைக்கோ அபகரிப்பு செய்யவோ விட கூடாது என வலியுறுத்தி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருகோணேச்சரத்தில் திருட்டு போன தாலி : முடிவிலியாய் தொடரும் சர்ச்சை

திருகோணேச்சரத்தில் திருட்டு போன தாலி : முடிவிலியாய் தொடரும் சர்ச்சை

எங்கள் நிலம் 

இதன்போது, “இந்தியாவிற்கு (India) காணிகளை விற்காதே எங்கள் நிலம் எங்களுக்கு” போன்ற வாசகங்களை ஏந்தியவாரு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதுடன், கப்பல் துறை, முத்து நகர் போன்ற பகுதியில் மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

இந்தியாவுக்கு காணிகளை தாரை வார்க்காதே! முத்து நகரில் மக்கள் போராட்டம் | Trincomalee Land Dispute Locals Protest

இக் காணிகள் இலங்கை (Sri Lanka) துறைமுக அதிகார சபைக்கு சொந்தமானது என அதனை வெளிநாடுகளுக்கு தாரைவார்க்க வேண்டாம் என மக்கள் தெரிவித்துள்ளளனர்.

இது தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ள போதிலும் குறித்த பகுதிக்குள் மக்கள் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க முடியாது என திருகோணமலை நீதிமன்ற நீதவானால் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என சீனக்குடா காவல்துறையினர் நால்வர் அடங்கிய பெயரை குறித்து தடை உத்தரவை வழங்கியுள்ளதாக குறித்த கவனயீர்ப்பில் ஈடுபட்ட சிறிலங்கா லங்கா சுதந்திரக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ராசிக் றியாஸ்தீன் கூறியுள்ளார்.

யாழ். காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் சேவை வெற்றிகரமாக ஆரம்பம்

யாழ். காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் சேவை வெற்றிகரமாக ஆரம்பம்

மின்சார காற்றாலை

அவர் மேலும் தெரிவிக்கையில், ”குறித்த முத்து நகர் மற்றும் கப்பல் துறை பகுதிகளில் மக்கள் 1972ம் ஆண்டு பிரதமராக செயற்பட்ட சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் (Sirimavo Bandaranaike) குடியேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இந்தியாவுக்கு காணிகளை தாரை வார்க்காதே! முத்து நகரில் மக்கள் போராட்டம் | Trincomalee Land Dispute Locals Protest

விவசாயத்தை நம்பி வாழும் மக்களை தற்போது மீள் எழுப்பி இந்தியாவுக்கு மின்சார காற்றாலை உற்பத்திக்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்குவது மக்களை நசுக்கும் செயலாகும்” என்றார்.

மன்னார் வைத்தியசாலை தொடர்பில் அக்கறையின்றி செயற்படும் முன்னாள் அமைச்சர் : முன்வைக்கப்பட்டுள்ள குற்றசாட்டு

மன்னார் வைத்தியசாலை தொடர்பில் அக்கறையின்றி செயற்படும் முன்னாள் அமைச்சர் : முன்வைக்கப்பட்டுள்ள குற்றசாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி