திருகோணமலை மாநகரசபையின் பாதீடு வெற்றி!
Trincomalee
Sri Lanka
Budget 2026
By Kanooshiya
Courtesy: Buharys Mohamed
திருகோணமலை மாநகரசபையின் 2026ஆம் ஆண்டிற்கான பாதீடு சபை உறுப்பினர்களினால் இன்று (23.12.2025) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, திருகோணமலை மாநகரசபையின் முதலாவது பாதீடு சபையின் முதல்வர் தலைமையில் இன்று (23.12.2025) காலை இடம்பெற்றது.
இதன்போது தமிழரசுக் கட்சி உறுப்பினர் அஜித்குமார் பாதீட்டை முன்மொழிய தமிழரசுக் கட்சி உறுப்பினர் குமாரகுலசிங்கம் வழிமொழிய அதனை சபை ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.
நிறைவேற்றம்
25 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் இன்றைய தினம் 20 பேர் பங்கு கொண்டிருந்ததுடன் 5 பேர் சபைக்கு சமூகமளிக்கவில்லை.

இதில் தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சுயேட்சைக்குழு உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்