திருகோணமலை சிறி பத்திரகாளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா : குவிந்த பக்தர்கள்
திருகோணமலை (Trincomalee) அருள்மிகு சிறி பத்திரகாளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழாவானது மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
குறித்த தேர்த் திருவிழாவானது இன்றைய தினம் (10.04.2025) அம்பிகையின் பக்தர்களின் பேராதரவுடன் ஆதீனகர்த்தா வேதாகமமாமணி பிரம்மசிறி.சோ.ரவிச்சந்திரக் குருக்களின் தலைமையில் இடம்பெற்றள்ளது.
இதன்போது காலை 5.00 மணிக்கு மூலஸ்தான பூஜையும், தம்ப பூஜையும், 6.15 மணிக்கு வசந்தமண்டப பூஜையும் நடைபெற்றுள்ளது.
நடன நிகழ்வுகள்
காலை 8.00 மணியளவில் அம்பாள் தேரில் ஆரோகணித்து, விநாயகரும், முருகனும் முன்னே வர அம்பாள் தனக்கென அமைக்கப்பட்ட சித்திரத்தேரினில் பவனி வந்து அடியார்களுக்கு காட்சியளித்தார்.
மேலும் தேருக்கு பின்னால் அம்பிகையின் பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதை காணக்கூடியதாக இருந்தததுடன் மாணவ மாணவிகளின் இசை, நடன நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் மற்றும் அம்பிகையின் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




