தமிழர் பகுதியில் அதிகரிக்கும் விகாரைகள்: அனுமதி வழங்கிய அரசியல் முக்கியஸ்தர்: அம்பலப்படுத்தினார் செந்தில் தொண்டமான்
திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் விகாரைகள் அமைப்பதற்கு சஜித் பிரேமதாச சிபாரிசு செய்ததாகவும் அதன்படியே விகாரைக்கு காணிகள் ஒதுக்கப்பட்டதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் கலாசார அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாசவின் வழிகாட்டலிலேயே கிழக்கில் அதிக விகாரைகள் கட்டுவதற்கு காணிகள் ஒதுக்கப்பட்டன.
குறிப்பாக தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் அதிகம் வாழும் பகுதிகளில் 23 விகாரைகள் அமைப்பதற்கு சஜித் பிரேமதாச சிவாரிசு செய்தார்.
இதனாலேயே திருகோணமலையில் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படுவதாக தெரிவித்தார்.