இலங்கையில் நங்கூரமிட்டன பலம் வாய்ந்த போர்க்கப்பல்கள்
ஜப்பானிய சுய பாதுகாப்புப் படையின் மூன்று பல்நோக்கு நாசகார போர்க்கப்பல்கள் இன்று (2) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
இந்த போர்க்கப்பல்கள் சிறிலங்கா கடற்படையால் கடற்படை பாரம்பரியத்திற்கு ஏற்ப வரவேற்கப்பட்டன.
FUYUZUKI என்ற கப்பல் கொமாண்டர் OSE Koichiro தலைமையில் வருகை தந்துள்ளது.இது 151 மீற்றர் நீளத்தை கொண்டுள்ளது.220 கடற்படையினர் இதில் உள்ளனர்.நாளையதினம் இந்தக்கப்பல் துறைமுகத்திலிருந்து வெளியேறும்.
காகா என்ற கப்பல் 248 மீற்றர் நீளமுடையது. அதன் கட்டளை அதிகாரியான கப்டன் நிஷிதா சடோஷியின் கீழ் 210 கடற்படையினர் உள்ளனர்.
MURASAME என்ற கப்பல் 151 மீற்றர் நீளமுடையது. இதில் 200 கடற்படையினர் உள்ளனர். இந்தக் கப்பலுக்கு கப்டன் காஷிவாகி யூச்சிரோ கட்டளையிடுகிறார்.
அவுஸ்ரேலியாவிலிருந்து கொழும்புக்கு வந்த இரண்டு கப்பல்களும் சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து ‘JA-LAN EX’ என்ற கூட்டு கடற்படை பயிற்சியில் பங்கேற்று ஒக்டோபர் 04 ஆம் திகதி பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.




