ஈரான் மீதான தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்த ட்ரம்ப்!
ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல்களை ரத்து செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரானிய இஸ்லாமியக் குடியரசுடனான பேச்சுவார்த்தைகள், அந்நாட்டுத் தலைமையின் மிக உயர்மட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில், அமெரிக்காவின் ஜனாதிபதி என்ற வகையில், இன்று இரவு ஈரான் மீது திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களையும் குண்டுவீச்சுகளையும் நான் ரத்து செய்துள்ளேன்.” என தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான கடற்படை முற்றுகை
மேலும், இந்தப் பேச்சுவார்த்தைகளும் அதன் இறுதி அம்சங்களும் கொள்கை அளவிலும் சரி, மிக விரிவான அளவிலும் சரி, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த உடன்பாட்டின் ஒப்புதலில் அமெரிக்கா, இஸ்ரேல், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், துருக்கி, பாகிஸ்தான், பஹ்ரைன், குவைத், ஜோர்டான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளதாகவும் ட்ரம்ப் பட்டியலிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த ஒப்பந்தம் முழுமையாக இறுதி செய்யப்படும் வரை, ஈரான் மீதான கடற்படை முற்றுகை முழு வீச்சில் தொடரும் எனவும் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் நேரமும் இடமும் விரைவில் அறிவிக்கப்படும்" என்றும் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |