சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு தடை : டிரம்பின் அதிரடி உத்தரவு
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் (Donald Trump) கையெழுத்திட்டுள்ளதாக அதிகார்வபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை வெள்ளை மாளிகை (The White House) அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடான இஸ்ரேலை குறிவைத்து சர்வதேச நீதிமன்றம் தொடர் விசாரணைகளை நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
சர்வதேச நீதிமன்றத்திற்கு தடை
இதனால் சர்வதேச நீதிமன்றத்திற்கு தடை விதிக்க ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பிடியாணை பிறப்பித்து இருப்பதன் மூலம் தனது அதிகாரத்தை நீதிமன்றம் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வருகைக்குப் பிறகு இந்த தடை உத்தரவுகள் வெளியாகி உள்ளன.
இவை வெளிப்படையாகவே அமெரிக்கா - இஸ்ரேல் இடையிலான நட்புறவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. இது குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தரப்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)