டொனால்ட் ட்ரம்ப் விதித்த அதிரடி உத்தரவு: அமெரிக்காவில் உருவாகவுள்ள சிக்கல்
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) அந்நாட்டு தேர்தல் விதிகளை இன்னும் கடுமையாக்கும் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவ்வாறு விதிக்கப்பட்ட புதிய உத்தரவின் கீழ், அமெரிக்காவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல்களில் வாக்களிக்க குடியுரிமைச் சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேர்தல் நாளுக்கு முன்பே வாக்குச் சீட்டுகளை பெறும் முறையில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புதிய கொள்கைகள்
இதேவேளை, முன்னாள் அமெரிக்க அரசாங்கங்கள் தேர்தல் பாதுகாப்பில் பின்தங்கியதாக குற்றம் சுமத்தியுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், மாநிலங்கள் இத்தகைய புதிய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளத் தவறினால், அவர்களுக்கு வழங்கப்படும் மத்திய அரசு நிதி நிறுத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
அதேநேரம், ட்ரம்ப்பின் இந்த உத்தரவு சட்டப்பூர்வமான சிக்கல்களை உருவாக்கக்கூடும் என்றும், தேர்தல் விதிகளை அமைப்பதில் மாநிலங்களுக்கு பெரும் அதிகாரம் உள்ளது என்றும் மாநிலங்கள் கூறுகின்றன.
அமெரிக்க குடியுரிமை
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த சில ஆண்டுகளாகவே தேர்தல் முறைகள் குறித்து சந்தேகங்களை எழுப்பியதுடன் 2020 ஆம் ஆண்டு தேர்தலில் ஜோ பைடனிடம் தனது தோல்விக்கு தேர்தல் முறைகேடே காரணம் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தற்போது, குடியுரிமை இல்லாமல் வாக்களிப்பது இனி முற்றிலும் சட்டவிரோதமாகும் என்பதுடன் சட்டத்தை மீறுவோருக்கு நாடுகடத்தும் தண்டனை கூட இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ட்ரம்ப்பின் இந்த புதிய உத்தரவால், அமெரிக்க தேர்தலில் வாக்களிப்பதற்கான அடிப்படை உரிமைகள் பறிக்கப்படலாம் பல்வேறு உரிமைக் குழுக்கள் கவலை வெளியிட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 4 நாட்கள் முன்
