முடக்கப்படும் அமெரிக்க கல்வித் திணைக்களம் : அம்பலமான ட்ரம்பின் திட்டம்
அமெரிக்க (United States) அரசின் கல்வித் திணைக்களத்தை மூடுவதற்கு ட்ரம்ப் (Donald Trump) முடிவுசெய்துள்ளதாக அமெரிக்க அரச வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அரசின் கல்வித் திணைக்களத்தை முற்றாக மூடிவிடுவதென்பது ட்ரம்பின் நீண்டகாலத் திட்டமாகும்.
அந்தவகையில் 2017இல் ட்ரம்ப் முதல் முறை ஜனாதிபதியான போது கல்வித் திணைக்களத்தை மூடிவிட முயற்சி செய்த போது அமெரிக்க நாடாளுமன்றம் அதற்கு ஒப்புதலளிக்கவில்லை.
ட்ரம்பின் நீண்டகாலத் திட்டம்
குறைந்த வருமானமுடைய மாகாணங்களுக்கு பல ஆயிரம் கோடி டொலரை கல்விக்கான உதவி நிதியாக அமெரிக்க ஒன்றிய அரசு அளித்து வருகின்றது.
அதேவேளை ஒரு இலட்சம் அரச பாடசாலைகளையும் , 34000 தனியார் பாடசாலைகளையும் கண்காணிக்கும் பணியையும் கல்வித் திணைக்களத்தை செய்து வருகிறது.
கல்லூரி மாணவர்களுக்கு ஒரு இலட்சத்து அறுபதாயிரம் கோடி டொலர் அளவுக்கு கல்விக்கடன் வழங்கும் பணிகளையும் கவனித்து வருகிறது.
எனினும் அரசின் செலவை குறைக்கும் நோக்கத்திலும் கல்வித் திணைக்களத்தில் அரசின் தலையீட்டை நிறுத்தும் நோக்கிலும் கல்வித் திணைக்களத்தை மூடிவிட டிரம்ப் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 2 நாட்கள் முன்
