ஈரான் மீதான தாக்குதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது! ட்ரம்ப் சுட்டிக்காட்டு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்ற நிலைமைக்கு மத்தியில், புதிய சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் வழியாக வாஷிங்டனுக்கு தெஹ்ரான் புதிய சமாதான முன்மொழிவொன்றை அனுப்பியதைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளின் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஈரான் மீது திட்டமிடப்பட்டிருந்த தாக்குதலை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக திங்களன்று கருத்து வெளியிட்ட ட்ரம்ப், “ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுக்கும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு தற்போது மிகச் சிறந்த வாய்ப்பு உருவாகியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு
மேலும், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் நோக்கில் பல்வேறு தரப்புகள் இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான புதிய பேச்சுவார்த்தை முயற்சிகள் சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
you may like this