ட்ரம்புக்கு ஈரான் வழங்கியுள்ள மிகப்பெரிய பரிசு...! போரில் புதிய திருப்பம்
ஈரான் ஒரு மிகப்பெரிய பரிசை வழங்கியிருப்பதாகவும் அது ஏராளமான பணம் மதிப்பிலானது என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று (24-03-2026) ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பரிசு அணுசக்தி தொடர்பானது அல்ல என்றும் மாறாக எண்ணெய், எரிவாயு மற்றும் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஆகியவற்றில் ஈரான் செய்துள்ள முக்கிய விட்டுக்கொடுத்தல் தொடர்பானது என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
திறைசேரி தடை
வாஷிங்டன் வட்டாரங்களின் தகவல்படி கடலில் தேங்கிக் கிடந்த சுமார் 140 மில்லியன் பேரல் ஈரானியக் கச்சா எண்ணெயைச் சர்வதேசச் சந்தைக்குக் கொண்டு வர அமெரிக்கத் திறைசேரி தடைகளைத் தற்காலிகமாக நீக்கியுள்ள நிலையில் இந்தப் பரிசு அதனுடன் தொடர்புடையதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
ஈரான் இந்த ஒப்பந்தத்தை எட்ட மிகவும் ஆர்வமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தைச் சீராக வைக்க ஈரான் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்துள்ளதாகவும் பாராட்டியுள்ளார்.

இந்த அதிரடி நகர்வுகளால் உலகச் சந்தையில் எண்ணெய் விலை குறையத் தொடங்கியுள்ள போதிலும் அந்தப் பரிசு சரியாக என்னவென்று பகிரங்கமாக அறிவிக்க ட்ரம்ப் மறுத்துள்ளார்.
போர்ப் பதற்றம் உச்சத்தில் இருக்கும் வேளையில் வெளியாகியுள்ள இந்த மர்மமான அறிவிப்பு, ஈரான் - அமெரிக்கா இடையே ஒரு திரைமறைவு உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதா என்ற பெரும் விவாதத்தைச் சர்வதேச அரங்கில் கிளப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர்களின் பிரச்சினையை 1965இல் ஏற்றுக்கொண்ட டட்லி செல்வா ஒப்பந்தம்… 12 மணி நேரம் முன்