இறுதி கட்டத்தை நோக்கி பலஸ்தீன போர்: ட்ரம்ப்–நெதன்யாகுவின் திடீர் சந்திப்பு
அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மற்றும் இஸ்ரேல் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) இருவருக்கும் இடையில் முக்கிய சந்திபொன்று இடம்பெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் இடையேயான போரை நிறுத்துவது தொடர்பில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் இடையேயான போர் இரண்டு ஆண்டுகளை நெருங்குகின்றது.
காஸா நகரம்
இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் நாளுக்கு நாள் காஸா நகரம் மோசமடைந்து வருகின்ற நிலையில், காஸாவுக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் உலக நாடுகள் பலவும் குரல் கொடுத்து வருகின்றன.
இந்தநிலையில் ஹமாஸ் உடனான இஸ்ரேலின் போரை நிறுத்த ட்ரம்ப், இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேச்சுவார்த்தை
இந்தாண்டு நான்காவது முறையாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரை நிறுத்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் மற்றும் பேச்சுவார்த்தையில் ஒரு முடிவு எட்டப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
