அமெரி்க்காவின் முன்னணி நாளிதழ் மீது வழக்கு தாக்கல்: ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவின் (United States) முன்னணி நாளிதழ் ஒன்றின் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் எனும் முன்னணி நாளிதழ் மீதே அவர் இவ்வாறு வழக்கு தொடரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில்,15 பில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய்) மான நஷ்ட ஈடு கோரி அவர் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நஷ்ட ஈடு
இது தொடர்பில் கருத்து தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப், “நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் நீண்ட காலமாக என்னை பற்றி அவதூறு பரப்பி வருகின்றது.
அந்த நாளிதழ் மீது 15 பில்லியன் டொலர் மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர இருக்கின்றேன்.
ஜனநாயக கட்சி
தீவிர இடது ஜனநாயக கட்சியின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகின்றது.
என்னை பற்றியும், எனது குடும்பத்தை பற்றியும் மற்றும் வணிகத்தை பற்றியும் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி செய்தி வெளியிடுகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.
பகல்ஹாம் தாக்குதல் நடந்தபோது, “ஜம்மு - காஷ்மீரில் போராளிகள் தாக்குதல்” என செய்தி வெளியிட்டிருந்த நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அமெரிக்க அரசு, “அது பயங்கரவாத தாக்குதல்” என தெளிவுபடுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
