விசித்திரமான திருப்பத்தை எடுக்கும் போர் குறித்த ட்ரம்பின் கூற்றுகள்!
லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்கள், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதற்குச் சமம் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டங்கள் குறித்து திருப்பங்கள் இருக்கும் என சர்வதேசங்கள் எதிர்பார்த்துள்ள நிலையில் அராக்சியின் இந்த குற்றச்சாட்டு வெளிவந்துள்ளது.
எந்தவொரு மீறலின் விளைவுகளுக்கும் அமெரிக்காவும் இஸ்ரேலும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் தனது X கணக்கில் பதிவிட்ட ஒரு பதிவில்,
ஈரான் மற்றும் அமெரிக்கா
“ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே எட்டப்பட்ட போர் நிறுத்தம், லெபனான் உட்பட அனைத்து முனைகளுக்கும் பொருந்தும்.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் நிறுத்தம் என்பது லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு போர் நிறுத்தமாகும்
ஒரு முனையில் அதை மீறுவது, அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தத்தை மீறுவதாகும்.
எந்தவொரு மீறலின் விளைவுகளுக்கும் அமெரிக்காவும் இஸ்ரேலும் பொறுப்புடையவை," என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமாதான ஒப்பந்தம்
இந்நிலையில் ஈரானில் போர் முடிவுக்கு வரக்கூடும் என்பது குறித்து டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகத் தளத்தில் ஒரு தெளிவற்ற அறிவிப்பை வெளியிட்டமை தொடர்பில் சர்வதேச வல்லுனர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு சமாதான ஒப்பந்தம், பெருமளவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவிட்டது என்று ட்ரம்ப் வெளியிட்ட பதிவை மேற்கோள்காட்டி அவர்கள் இதனை வெளிப்படும்மியுள்ளனர்.
இந்த திருப்புமுனை ஒப்பந்தத்தின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியிருந்தார்.
இது, கொடிய மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் இந்தப் போர் முடிவுக்கு வருவது உடனடி என்ற நம்பிக்கையை உலகம் முழுவதும் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |