அமைதி ஒப்பந்தத்திற்கு மொஜ்தபா கூறிய பதில்! ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே இறுதி செய்யப்படவுள்ளதாகக் கூறப்படும் அமைதி ஒப்பந்தத்திற்கு, ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தனது ஒப்புதலை வழங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள ட்ரம்ப், தனக்குக் கிடைத்த நம்பகமான தகவல்களின்படி ஈரானிய உச்ச தலைவர் இந்த ஒப்பந்தத்திற்குச் சம்மதம் தெரிவித்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் இராணுவப் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஒப்பந்தம் முழுமையாக இறுதி செய்யப்பட்டு கையெழுத்தானவுடன், ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடுமையான கடற்படை முற்றுகை உடனடியாக முழுமையாக திரும்பப் பெறப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்
இந்த முக்கிய நகர்வின் காரணமாக சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று சுட்டிக்காட்டிய ட்ரம்ப், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது மிகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்திக்கும் என்றும் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.

எனினும், இந்த ஒப்பந்தம் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை ஈரான் அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை என்பதும், ஈரானிய பாதுகாப்புத் தரப்பினர் இது குறித்துத் தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |