இந்தியா மீது ட்ரம்ப் 25% வரி....! நாளை முதல் நடைமுறைக்கு
இந்தியாவில் (India) இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) அறிவித்துள்ளார்.
குறித்த வரி விதிப்பானது ஆகஸ்ட் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரூத் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் டொனால்ட் டிரம்ப் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவால் விதிக்கப்பட்ட வரி
இந்தியா நமது நண்பனாக இருந்தாலும், அவர்களின் வரிகள் மிக அதிகமாக உள்ளதால், பல ஆண்டுகளாக நாம் அவர்களுடன் ஒப்பீட்டளவில் குறைவாகவே வர்த்தகம் செய்து வருகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த முடிவு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளைப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
மேலும் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஆனால் முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இது வியட்நாம், இந்தோனீசியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மீது அமெரிக்காவால் விதிக்கப்பட்ட வரிகளை விட அதிகம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
