ட்ரம்புக்கு மோடியின் வாக்குறுதி: பல்டி அடித்த இந்தியாவால் சிக்கலில் ரஷ்யா
ரஷ்யாவில் (Russia) எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், “பிரதமர் மோடி எனது நண்பர்.
எங்களுக்குள் சிறந்த உறவு இருக்கின்றதுடன் இந்தியா ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதில் எனக்கு மகிழ்ச்சியில்லை.
அபத்தமான போர்
அத்தோடு, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று என்னிடம் மோடி உறுதியளித்தார்.
சீனாவையும் இதனைச் செய்ய வைக்க வேண்டும், ரஷ்யா அபத்தமான போரைத் தொடர்கின்றது.
நான்காவது ஆண்டு
இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் அத்தோடு, ரஷ்யாவும் இராணுவ வீரர்கள் உள்பட இலட்சக்கணக்கானோரை இழந்துள்ளது.
இந்த போர் தொடங்கியிருக்கவே கூடாது, முதல் வாரத்திலேயே ரஷ்யா வெற்றி பெற்றிருக்க வேண்டியது ஆனால் நான்காவது ஆண்டை அடைந்துள்ளார்கள்.
போர் நிறுத்தத்தை காண நான் விரும்புகின்றேன் எனவே இந்தியா எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை.
ரஷ்ய ஜனாதிபதி
மத்திய கிழக்கில் கடந்த வாரம் நாங்கள் செய்ததை ஒப்பிடும்போது இது எளிதானது என்பது உங்களுக்கு தெரியும்.
அது 3,000 ஆண்டுகள் பிரச்சினை ஆனால் இது வெறும் மூன்று ஆண்டு போர் மட்டுமே.
நாங்கள் ரஷ்யா மற்றும் உக்ரைன் போரை நிறுத்திக் காட்டுவோம், அத்துடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் போரை நிறுத்துவார் என்று நினைக்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
