புடின் எந்த நேட்டோ நாடுகள் மீதும் தாக்குதல் நடத்த மாட்டார்! உறுதியாக கூறும் ட்ரம்ப்
ரஷ்ய ஜனாபதிபதி விளாடிமிர் புடின் எந்தவொரு நேட்டோ (NATO) உறுப்பு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்த மாட்டார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த வாரத் தொடக்கத்தில் சிஐஏ இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப், இது குறித்து ரஷ்ய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததாக வெளியான ஊடகச் செய்திகளையும் அவர் மறுத்துள்ளார்.
ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது ட்ரம்ப் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சிஐஏ இயக்குநரின் விஜயம்
முன்னதாக ஊடகமொன்றுக்கு அளித்த தொலைபேசி நேர்காணலிலும், உளவுத்துறை அதிகாரிகளைச் சந்திப்பதற்காகச் செவ்வாயன்று ரஷ்யா சென்ற சிஐஏ இயக்குநர் ராட்க்ளிஃப், எந்தவொரு குறிப்பிட்ட எச்சரிக்கைச் செய்தியையும் கொண்டு செல்லவில்லை என்றும், வழக்கமான சந்திப்பையே மேற்கொண்டார் என்றும் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.

இருப்பினும், நேட்டோ உறுப்பு நாடு மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கவே ராட்க்ளிஃப் மாஸ்கோ சென்றதாக 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! ' |