நேபாள வெள்ளத்தில் சிக்கிய 350 பேர் மீட்பு...! தொடரும் மீட்பு பணிகள்
Nepal
World
By Shalini Balachandran
நேபாளத்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் சிக்கிய 350 இற்கும் மேற்பட்டோரை நேபாள இராணுவத்தினர் இன்று பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் போது 50 வெளிநாட்டவர்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் இராணுவப் பேச்சாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெயிட்டுள்ளன.
தரைப்படையினர்
மீட்கப்பட்ட 50 வெளிநாட்டவர்களில் 30 இந்தியர்கள், 8 சீனர்கள், 8 கொரியர்கள், 2 அமெரிக்கர்கள் மற்றும் 2 இத்தாலியர்கள் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தரைப்படையினர் மற்றும் உலங்கு வானூர்திகள் மூலம் அவசர மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி