வலுக்கும் உக்ரைன் - ரஷ்யா போர்: புடினின் முடிவை அறிவித்தார் ட்ரம்ப்
உக்ரைன் உடனான போரை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிறுத்த விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நான்காவது ஆண்டை எட்டவுள்ள நிலையில், இரு நாட்டுத் தலைவர்களுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை ட்ரம்ப் முன்னெடுத்துள்ளார்.
போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் மேற்கொள்வதற்காக 28 அம்ச வரைவு அறிக்கையையும் ட்ரம்ப் வெளியிட்டார்.
பேச்சுவார்த்தை
இருப்பினும், இந்த அறிக்கை ரஷ்யாவுக்கு சாதகமாக இருப்பதாக உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் திருத்தங்கள் முன்மொழிந்துள்ளன.
இந்தநிலையில், மாஸ்கோவில் புடினை சந்தித்து வெள்ளை மாளிகையின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் ஐந்து மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், “புடினுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சிறப்பான சந்திப்பை நடத்தினார்கள்.
சந்திப்பில் பேசப்பட்டது தொடர்பாக தற்போது என்னால் சொல்ல முடியாது, புடின் போரை முடிவுக்கு கொண்டுவர விரும்புகின்றார்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |