வளைகுடாவில் வெடித்த போர்: நிறுத்த சொல்லும் வரை ஈரானை தாக்குங்கள் - டிரம்பின் உத்தரவால் பதற்றம்
நான் போதும் என்று சொல்லும் வரை ஈரான் மீதான தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்களே தமது இலக்குகள் என்றும் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.
செவ்வாயன்று ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்
"அவர்கள் பேச்சுவார்த்தை மேசைக்கு வரும் வரை, நாங்கள் அவர்களின் மின் உற்பத்தி நிலையங்களைச் செயலிழக்கச் செய்வதுடன் அவர்களின் எல்லாப் பாலங்களையும் தகர்ப்போம் என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஈரான் படைகள் ஏழு வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையத்தின் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் தெரிவித்துள்ளார்.
மேலும், அண்டை வளைகுடா நாடுகளை நோக்கி ஈரான் பல ஏவுகணைகளையும் ஆளில்லா ட்ரோன்களையும் ஏவியுள்ளதாகத் தெரிவித்த அட்மிரல் கூப்பர், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இத்தகைய செயல்களுக்கு ஈரான் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் குற்றங்கள்
இந்தநிலையில் அமெரிக்காவின் குற்றங்கள் தொடரும் வரை ஆக்கிரமிப்பாளருக்கு எதிரான பழிவாங்கலும் தண்டனையும் தொடரும் என இஸ்லாமிய புரட்சிகர காவல் படை எச்சரித்துள்ளது.

இந்தத் தாக்குதல்கள் மீண்டும் தொடரப்பட்டால் அவை மேலும் பல ஆச்சரியமூட்டும் பதிலடித் தாக்குதல்களை சந்திக்க நேரிடும் எனவும் புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |