வலுக்கும் உக்ரைன் - ரஸ்யா போர்..! 400 மில்லியன் மதிப்பான ஆயுத உதவி - அமெரிக்கா அதிரடி
போர்
உக்ரைன் மீது கடந்த பெப்ரவரி மாத இறுதியில் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா தொடங்கிய போர் 8 மாதத்தைக் கடந்துள்ளது.
போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது.
இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டொலர்கள் ராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஏவுகணை ஆயுதங்கள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் ராணுவ ஆயுத உதவியின் கீழ் உக்ரைனுக்கு வழங்கப்படுகிறது.
உள்கட்டமைப்பு மீது ஏவுகணைகள்

ரஷியாவும், ரஷியப் படைகளும் இந்த நாட்டின் குடிமக்களின் உள்கட்டமைப்பு மீது ஏவுகணைகள் மற்றும் ஈரானிய ஆளில்லா விமானங்களை பொழிகிறது.
இந்த இக்கட்டான தருணத்தில் வான் பாதுகாப்பின் தீவிரத் தேவையை நாங்கள் அங்கீகரிக்கிறோம் என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கீவ்வில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவியாக இதுவரை 15 பில்லியனுக்கும் அதிகமான ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது..