தடை விதிப்பேன்: மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் டிரம்ப்
ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயத்தை ட்ரம்ப் தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பதிவில் மேலும் குறிப்பிடுகையில், ஈரான் எண்ணெய் அல்லது பெட்ரோ கெமிக்கல் பொருட்களின் அனைத்து கொள்முதல்களும் இப்போதே நிறுத்தப்பட வேண்டும்.
இரண்டாம் நிலை தடை
ஈரானில் இருந்து எந்த அளவு எண்ணெய் அல்லது பெட்ரோ கெமிக்கல்களை வாங்கினாலும், அந்த நாடு உடனடியாக இரண்டாம் நிலை தடைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
அவர்கள் அமெரிக்காவுடன் எந்த வகையிலும், வணிகம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அவர்களுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும் என டிரம்ப் கூறியுள்ளார்.
நெருக்கமான வட்டாரத்தில் பதவி நீக்கம்
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக் வால்ட்ஸ் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறை பதவியேற்ற பிறகு, அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து ஒருவா் பதவி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
