நேட்டோ நாடுகளை மிரட்டும் ட்ரம்ப்பின் புதிய வரி ஆயுதம்...!
கிரீன்லாந்தை கையகப்படுத்துவதற்கு ஒத்துழைக்காத நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு கிரீன்லாந்து தேவைப்படுவதால் கையகப்படுத்துவதற்கு ஒத்துழைக்காத நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக ட்ரம்ப் அரசு உருவாக்கி வரும் கோல்டன் டோம் பாதுகாப்பு அமைப்புக்கு கிரீன்லாந்து முக்கியமானது என ட்ரம்ப் தெரிவித்து வருகின்றார்.
இதற்காக அதனைக் கைப்பற்றும் முயற்சியிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.

அத்தோடு, இதற்கு ஆதரவளிப்பதில் நேட்டோ அமைப்பு முன்னணியில் இருக்க வேண்டும் எனவும் ட்ரம்ப் வலியுருத்தியுள்ளார்.
மேலும், நேட்டோவின் இராணுவ செயல்திறன் பெரும்பாலும் அமெரிக்காவையே சார்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |