ஈரான் போராட்டக்காரர்களைத் தூண்டும் ட்ரம்ப்பின் புதிய வியூகம்...!
Donald Trump
United States of America
Iran
World
By Shalini Balachandran
ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடுமாறு ஈரான் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கான உதவிகள் வந்து கொண்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயத்தை அவரது உத்தியோகப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசபக்தர்கள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஈரான் தேசபக்தர்கள் தொடர்ந்து போராடுங்கள்.
உங்கள் அமைப்புகளை கையில் எடுத்துக் கொள்ளுங்கள்.

கொலைகாரர்கள் மற்றும் மோசமாக விமர்சிப்பவர்களின் பெயர்களை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
அவர்கள் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டி வரும்.
உங்களுக்கான உதவி வந்து கொண்டு உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி