பிரித்தானியாவுக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை! அதிரடியாக பதில் வழங்கிய ஸ்டார்மர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனாவுடன் வணிக உறவுகளை வலுப்படுத்துவது பிரிட்டனுக்கு “மிகவும் ஆபத்தானது” என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து வர்த்தக மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள நிலையில் ட்ரம்பின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
ஸ்டார்மரின் பதில்
இருப்பினும், சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் என்றும், ஹாங்காங்குடன் சேர்த்து பிரிட்டனின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டாளி என்றும் ஸ்டார்மர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Image Credit: Reuters
அத்தோடு, சீனாவுடன் உறவை தவிர்ப்பது நடைமுறைக்கு ஏற்றது அல்ல எனவும் இந்த பயணம் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றும் அவர் விளக்கியுள்ளார்.
கனடாவுக்கு எச்சரிக்கை
இதேவேளை, ட்ரம்பின் விமர்சனத்திற்கு பதிலளித்த சீனா, பரஸ்பர நன்மை அடிப்படையில் அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளது.

Image Credit: PRIO
இதுபோன்றே, சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்த கனடாவையும் ட்ரம்ப் விமர்சித்து, கடும் வரி விதிப்பதாக எச்சரித்துள்ள நிலையில், மேற்கு நாடுகளுக்குள் சீனா தொடர்பான கருத்து வேறுபாடு வெளிப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |