உக்ரைனை கைவிடுகிறதா அமெரிக்கா..! ட்ரம்பின் முடிவை வரவேற்கும் ரஷ்யா
உக்ரைனை(ukraine) நேட்டோவில்(nato) சேர்க்கும் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின்(donald trump) முடிவுக்கு ரஷ்யா(russia) வரவேற்பு தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையேயான போர் 1,000 நாட்களை கடந்து நடந்து வருகிறது.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பைடன்(joe biden) தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தார். மேலும், நேட்டோ அமைப்பில் உக்ரைனை இணைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இது ரஷ்யாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
நேட்டோவில் உக்ரைன் இணைய அமெரிக்கா ஆதரவு கொடுக்காது
இந்த நிலையில், நேட்டோ அமைப்பில் உக்ரைனை இணைக்கும் முன்னாள் ஜனாதிபதி பைடனின் முடிவை, தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் கைவிட்டு விட்டார்.
அதாவது, நேட்டோவில் உக்ரைன் இணைய அமெரிக்கா ஆதரவு கொடுக்காது என்று கூறிய அவர், இந்த விவகாரத்தில் பைடன் அமெரிக்காவின் நிலையை மாற்றிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
ட்ரம்ப்பின் முடிவுக்கு ரஷ்யா வரவேற்பு
இந்த நிலையில், ட்ரம்ப்பின் முடிவுக்கு ரஷ்யா வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில், 'உக்ரைன் விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி பைடனின் நிர்வாகம் எடுத்த முடிவுகள் குறித்து ட்ரம்ப் முதல் முறையாக பேசியுள்ளார். உக்ரைனை நேட்டோவில் இணைக்கக் கூடாது என்ற ரஷ்யாவின் விருப்பத்திற்கு ட்ரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்' எனக் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)