போரினால் பிடிக்க முடியாத நாட்டை பணத்தினால் பிடிக்க முயல்கின்றனர் கூட்டமைப்பினர் - உதய கம்மன்பில
போரினால் செய்ய முடியாததை பணத்தினால் செய்துகொள்ளும் முனைப்பிலையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்றதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சித் தலைவர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
மல்வத்து மாநாயக்க தேரருடனான நேற்றைய சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் விக்டோரியா நூலண்ட், மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கூறியதை சுட்டிக்காட்டினார்.
மற்றும் புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறும் நூலண்ட் வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதேவேளை, யுத்தத்தினால் செய்ய முடியாததை, இதனூடாக செய்யப் பார்க்கின்றனர் என விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த பிவித்துரு ஹெல உறுமய கட்சித் தலைவர் உதய கம்மன்பில, அரசாங்கம் பொருளாதார ரீதியில் வீழ்ந்து கிடக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி போரினால் செய்ய முடியாததை, பணம் மூலம் செய்யும் எதிர்பார்ப்பிலே தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்றதாக கூறியுள்ளார்.