சாதாரணதரபரீட்சைக்கு தோற்றிய ‘சுனாமி பேபி81’
உலகத்தினையே தன்பால் ஈர்த்த சுனாமி பேபி என அழைக்கப்பட்ட சுனாமியின் போது தெய்வாதீனமாக உயிர்தப்பிய ஜெயராஜா அபிலாஸ் இன்று க.பொ.த.சாதாரண பரீட்சைக்கு தோற்றினார். சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட போது பிறந்து 67 நாட்களே ஆன இவர் 18 மணிநேரத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டிருந்தார்.
கல்முனை ஆதார வைத்தியசாலையில் தாதியர்களின் கண்காணிப்பில் இருந்த இவர், 9 தாய்மாரினால் உரிமை கோரப்பட்டார். நீதிமன்ற நடவடிக்கையின் பின் மேற்கொள்ளப்பட்ட DNA பரிசோதனைக்குப் பிறகு அவரது தந்தை அடையாளம் காணப்பட்டு ஒப்படைக்கப்பட்டார்.
இவர் குறித்த வைத்தியசாலையில் 81ஆவது கட்டிலில் இருந்த காரணத்தினால்தான் சுனாமி 81 என்ற அடையாளம் இவருக்கு சூட்டப்பட்டது.
இன்று (01) காலை தனது பெற்றோரின் ஆசிர்வாதத்தை அடுத்து மட்டக்களப்பு களுதாவளையில் உள்ள சுனாமி நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்திய பின் அவர் செட்டிபாளையம் மகா வித்தியாலயம் சென்று பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.