ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்கு சுனாமி பேபியின் இல்லத்தில் அஞ்சலி
2004 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட ஆழிப்பேரலையால் உயிர்நீத்த உறவுகளுக்கு சுனாமி பேபியின் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு - குருக்கள்மடத்தில் அமைந்துள்ள சுனாமி பேபியின் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபியின் முன்பாக சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக சுனாமி பேபியின் பெற்றோர் இன்று (26.12.2025) அஞ்சலி செலுத்தினர்.
தற்போது 21 வயதுடைய “சுனாமி பேபி 81“ என அறியப்படும் ஜெயராசா அபிலாஷ் தனது உயர் படிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார்.
நினைவுத் தூபியில் அஞ்சலி
இந்த நிலையில் அவரது இல்லத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத் தூபியில் அவரது பெற்றோர் இன்று சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சுனாமி அனர்த்தத்தால் இலங்கையில் 35,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், சுமார் 5,000 பேர் காணாமல் போன நிலையில் பெருமளவிலான சொத்துக்களும் அழிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |