துணுக்காய் வதைமுகாமின் அழியாத வலி! அம்பலமாகும் புதையுண்டு கிடக்கும் உண்மைகள்
இலங்கையின் உள்நாட்டுப் போரின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாக துணுக்காய் வதைமுகாம் உள்ளது என்பதை, இன்றளவும் உரிமைக்காக போராடிய தமிழ் இனத்தவர்களால் மறுக்க முடியாத சான்றாக காணப்படுகிறது.
இது தொடர்பான உண்மைகளை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை என்றும், மேலும் இது தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது எனவும் குற்றம் சுமத்தப்படுகிறது.
வடக்கில் தமிழீழ வீடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிராக இந்திய இராணுவத்தினர் இலங்கையில் நிலைகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களை குறித்த பகுதிக்கு அழைத்துவந்து சித்திரவதை செய்ததாக பிரதேச மக்கள் இன்றளவும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
எனினும் தமிழ் தேசியத்திற்கு எதிராகவும், சிங்கள இனவாதிகளுக்கு ஆதரவாகவும் செயற்படும் சில விசமிகள் இந்த பின்னணியை திசைதிருப்பி முழு பலியையும் விடுதலைப்புலிகளின் மீது சுமத்த எத்தனிப்பதாக அங்குள்ள மக்களின் கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன.
இவ்வாறான பல சர்ச்சைகள் மூடி மறைக்கப்பட்ட துணுக்காய் வதைமுகாம் பற்றி எமது ஐ.பி.சி தமிழ் ஊடகம் களவிஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தது.
இதன்போது யுத்தகாலத்தில் இருந்து வாழ்ந்து, இன்றும் அங்கு குடிகொண்டிருக்கும் மக்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையிலும், வெளிப்படாத பல தகவல்கள் அம்பலமானதை எமது ஊடகம் தொடரும் காணொளியில் வெளிக்கொணர்கிறது....

