நிலநடுக்க பேரிடரால் 35 ஆண்டுகளுக்கு பின்னர் திறக்கப்படும் இரு நாட்டு எல்லை!
பூகம்ப பேரிடரால் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 28,000-ஐ கடந்துள்ளது.
மீட்புப் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வரும் நிலையில், பேரிடர் பகுதிகளுக்கு சென்று துருக்கி அதிபர் ரீசெப் தயீப் எர்டோகன் பார்வையிட்டார்.
இந்த நிலையில் அண்டை நாடான அர்மேனியாவின் எல்லைக் கடவு, மனிதாபிமான உதவிகளை கடக்க திறக்கப்பட்டுள்ளதாக துருக்கிய தூதர் செர்டார் கிலிக் தெரிவித்துள்ளார்.
துருக்கிக்கு உதவி
Thank you dear @VahanKostanyan thank you dear @RubenRubinyan for your kind efforts to make this happen. I will always remember the generous aid sent by the people of Armenia to help alleviate the sufferings of our people in the eartquake striken region in Türkiye. https://t.co/4Q6PHOhsVj pic.twitter.com/NNU7r0FLow
— Serdar KILIÇ (@serdarkilic9) February 11, 2023
கடந்த 1988ஆம் ஆண்டு அர்மேனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 30,000 பேர் பலியாகினர்.
அப்போது அர்மேனியாவுக்கு துருக்கி உதவிட எல்லைக் கடவு திறக்கப்பட்டது.
அதன் பின்னர் 35 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக துருக்கிக்கு உதவ தற்போது எல்லைக் கடவு திறக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

துருக்கிக்கு உதவி செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி என்று அர்மேனியாவின் தேசிய சட்டமன்றத்தின் துணைத் தலைவர் ரூபன் ரூபினியன் டுவீட் செய்துள்ளார்.
இராஜதந்திர உறவு
Humanitarian aid from #Armenia crossed the Margara bridge on #Armenia-#Turkey border heading to earthquake-stricken region. pic.twitter.com/7lwWrbE3fa
— Vahan Kostanyan (@VahanKostanyan) February 11, 2023
இதற்கிடையில் அலிகன் கிராசிங்கில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்ட உதவிகளுடன் ஐந்து கனரக வாகனங்கள் மூலம் துருக்கிக்கு அனுப்பப்டுள்ளதாக செர்டார் கிலிக் கூறியுள்ளார்.

துருக்கி - அர்மேனியா ஆகிய இரு நாடுகளும் முறையான இராஜதந்திர உறவுகளை ஒருபோதும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.
மேலும் 1990களில் இருந்து அவற்றின் பகிரப்பட்ட எல்லை மூடப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு டிசம்பரில் இரு நாடுகளும் உறவுகளை சீராக்க உதவுவதற்காக தூதர்கள் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.