மீண்டும் அதிபயங்கர நிலநடுக்கம்: பலியானோரின் எண்ணிக்கை 1,600ஐ தாண்டியுள்ளது..!(காணொளி)
நான்காம் இணைப்பு
தென்கிழக்கு துருக்கியில் சிரிய எல்லைக்கு அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,600ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது, மேலும் வடக்கு சிரியாவிலும் சேதம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது.
After 7.8 magnitude earthquake, another quake of the same magnitude jolts Turkey.
— TIMES NOW (@TimesNow) February 6, 2023
"Around 1300 people have died in total. Tremors were felt across Cyprus. Syria & Lebanon. India will be sending NDRF personnel & reinforcements to ground zero," @RishabhMPratap tells @kritsween. pic.twitter.com/1LBBa9q7nu
மூன்றாம் இணைப்பு
தென்கிழக்கு துருக்கியில் சிரிய எல்லைக்கு அருகில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 284ஐ தாண்டியுள்ளதாக துருக்கி துணை அதிபர் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 அலகுகளாக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது காணொளியாக பதிவாகியுள்ளது.
இரண்டாம் இணைப்பு
துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 200 ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துருக்கி நாட்டின் தெற்கு பகுதியான காசியான்டெப் அருகே இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8ஆகப் பதிவானது.
காசியான் டெப் மாகாணம் நுர்நாகி நகரில் இருந்து 23 கி.மீ. தொலைவில் நிலநடுக்கமானது மையம்கொண்டிருந்தது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் பல வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்தன.
கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இதுவரை 200 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பலர் காயமடைந்தனர். தொடர்ந்து அப்பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
துருக்கியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் லெபனான், ஜோர்டான், பிரிட்டன், ஈராக் உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
துருக்கியில் அவ்வப்போது நிலநடுக்கம், நில அதிர்வுகள் ஏற்பட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.
சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மேற்கு அஜர்பைஜான் நகரம் கடுமையான பாதிப்புகளை சந்தித்தது.
அந்நாட்டில் உள்ள கோய் நகரில் வீடுகள் பல இடிந்து விழுந்தன. ஏராளமானோர் உயிரிழந்தனர். இதற்கு மேலாக கடந்த வாரம், துருக்கி-ஈரான் எல்லையில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
7.8 ரிக்டர் அளவில்
இதில் 122 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை மீண்டும் நூர்தாகி அருகே 9 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து அமெரிக்காவின் புவி ஆய்வு மையம் தெரிவிக்கையில்,
Tsunami hits Turkey-Syria coastline. #earthquake #Turkey #Turkiye #Syria pic.twitter.com/oEXNjoU0gu
— Ministry of Education, Punjab (@EduMPunjab) February 6, 2023
" துருக்கியின் தெற்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 7.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் குறித்து வெளியான செய்தியில், அந்த நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும், குறைந்தது 15 பேர் இறந்திருக்க கூடும் என உள்நாட்டு தகவல்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்கம் சிரியா, லெபனான், இஸ்ரேல்
Thousands feared dead after a massive 7.8 magnitude #earthquake strikes #Turkey pic.twitter.com/1yLAP22jhI
— Narrative Pakistan (@narrativepk_) February 6, 2023
கட்டடங்கள் பல இடிந்து விழுந்திருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
ஆனால், துருக்கி அரசு சார்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் சிரியா, லெபனான், இஸ்ரேல் உள்பட அண்டை நாடுகளில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.''என தெரிவித்துள்ளது.