உடைக்கப்பட்ட ரூமேஷின் ஈட்டிகள்: துருக்கி ஏர்லைன்ஸ் வருத்தம்
World Athletics Ultimate Championship போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்த உலக சாம்பியன் ருமேஷ் தரங்கவின் விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் Turkish Airlines நிறுவனத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த விசாரணை தொடர்பான கலந்துரையாடல் நேற்று (15.09.2026) சிவில் விமான சேவைகள் அதிகார சபை வளாகத்தில் நடைபெற்றது.
இதில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடிதுவக்கு தலைமையில் உள்ளிட்ட பல துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Turkish Airlines நிறுவனம்
இதன்போது, ருமேஷ் தரங்கவின் விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் Turkish Airlines நிறுவனத்தின் பிரதிநிதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் நிறுவன ரீதியான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றர்.
இந்த நிலையில் விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தை உரிய முறையில் மதிப்பீடு செய்து, அதற்கான இழப்பீட்டை விரைவாக வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |